Pages

Apr 3, 2013

அமைச்சர் விமல் வீரவங்ச, இன்று யாழ் விஜயம்….

பொதுவசதிகள், வீடமைப்பு மற்றும் நிர்மாண பொறியியல் துறை அமைச்சர் விமல் வீரவங்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர் யாழ், குருநகர் தொடர்மாடி வீடமைப்பு திட்டத்தின் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் ஜனசெவண தேசிய வீடமைப்பு திட்டத்தின் ஒரு கட்டமாக குறித்த தொடர்மாடி வீடமைப்பு திட்டம் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது. அதனடிப்படையில் 5 அடுக்குகளை கொண்ட குடியிருப்பு தொகுதியில், 160 வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன. யுத்த காலப்பகுதியில் யாழ் குருநகரிலுள்ள குறித்த வீடுகள் பாரியளவில் பாதிக்கப்பட்டன. இதனால் வீடமைப்பு திட்டத்திலுள்ள கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் என்பன முற்றாக சேதமடைந்துள்ளன. இந்நிலையிலேயே குருநகர் தொடர்மாடி வீடமைப்பு திட்டத்தின் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment