Pages

Apr 3, 2013

உதயன் நாளிதழின் கிளிநொச்சி அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்..

 


யாழில் இருந்து வெளிவரும் உதயன் நாளிதழின் விநியோகப் பணிகளை முடக்கும் நோக்குடனும், பணியாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் அப் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது இனந்தெரியாத கும்பலொன்று இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் தாக்குதலை நடத்தியிருக்கின்றது.
தாக்குதலில் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை விநியோகப் பணிக்காகச் சென்ற இரு பணியாளர்கள் மற்றும் கிளை முகாமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு


அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

 

 

No comments:

Post a Comment