Pages

Apr 13, 2013

உதயன் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை



யாழ்ப்பாணத்தில் உதயன் அலுவலகத்தின்  மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள அமெரிக்கா, இந்தச்சம்பவம் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக பொதுசன விவகார தலைமை அதிகாரி கிறிஸ்தோபர் ரீல்ஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உதயன் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு சிறிலங்கா அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ள அவர், இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment