சவுதியில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள 1200 இலங்கைப் பணியாளர்கள்
சவுதி அரேபியாவின் ஜித்தாவிலுள்ள பாலமொன்றுக்கு அருகில் பல நாட்களாக தங்கியிருக்கும் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ள போதிலும் தம்மை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இலங்கைப் பணியளார்கள் தெரிவிக்கின்றனர்.
தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ள தமக்கு பல நாட்களாக உணவு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்தில் சுமார் ஆயிரத்து 200 பணியாளர்கள் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment