புத்தாண்டு பாரம்பரியங்கள் இலங்கை சமூகத்தை பலப்படுத்தும்
புத்தாண்டு பாரம்பரியங்கள் மூலம் குடும்பத்தில் ஏற்படும் நெருக்கம் இலங்கை சமூகத்தை பலப்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டைய காலத்திலிருந்து பேணி பாதுகாக்கப்படும் மரபுரிமைகளை எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும்.
இதன்மூலம் நாட்டின் அபிமானம் உறுதிப்படுத்தப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தமி;ழ் சிங்கள புத்தாண்டடை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிறந்துள்ள புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். தமிழ் சிங்கள புத்தாண்டு பாரம்பரிய கலாசாரமாகும். புத்தாண்டின் மூலம் உண்மையான மகிழ்ச்சியடைவதற்கு செழிப்பானதொரு தேசம் இருக்க வேண்டும்.
இதற்காகவே அரசாங்கம் நாட்டின் அரிசி தேவையில் தன்னிறைவை ஏற்படுத்தியுள்ளது. நல்லொழுக்கமுள்ள மக்களைக் கொண்ட செழிப்பான தேசமொன்றை ஏற்படுத்தி மகிழ்ச்சிகரமான புத்தாண்டினை உருவாக்குவதற்கு மேற்கொண்ட அர்ப்பணிப்புகள் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மலர்ந்துள்ள புத்தாண்டு அனைவருக்கும் இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment