யாழ்ப்பாணத்திலும் பொதுபல சேனா களமிறங்குகிறது!
பொதுபல சேனா அமைப்பின் அலுவலகமொன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிறைவேற்றுக்
குழுவின் உறுப்பினர் திலந்த விதானகே கருத்து வெளியிடும்போது, தமிழ், சிங்கள
மக்களிடையே புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தமது
அமைப்பு பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதாகவும், இதன் ஓர் அங்கமாக
யாழ்ப்பாணத்தில் தமது அமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று
திறக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
நல்லிணக்கத்தைக்
கட்டியெழுப்புவதற்கான விசேட கருத்தரங்கொன்று எதிர்வரும் வியாழக்கிழமை
கொழும்பில் நடத்தப்படவுள்ளதாகவும், இதில் வடக்கிலிருந்து சில பிரதிநிதிகள்
கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிங்கள கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா,
கடந்த காலங்களில் தெற்கில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கெதிராக பல
நெருக்குவாரங்களைக் கொடுத்திருந்தது.
அத்துடன், முஸ்லிம்களின் வர்த்தக
நிலையங்கள் தாக்கப்பட்டமை, மதவழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டமை ஆகிய
சம்பவங்களின் பின்னணியில் இந்த பொதுபல சேனாவே முன்னின்று செயல்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பு சிறிலங்காவின்
உயர்மட்ட தலைவர்களின் முழுமையான ஆதரவுடன் இயங்கிவரும் அமைப்பு என்று
மக்களால் நம்பப்படுகின்றது. (TWT)
No comments:
Post a Comment