நுவரெலிய வசந்த கால சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி
கடந்த முதலாம் திகதி முதல் நுவரெலியாவின் வசந்தகாலம் ஆரம்பமாகியுள்ள
போதிலும், தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மந்த நிலை
காணப்படுவதாகஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இனம்தெரியாதவர்கள் தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு
அனுப்பிய தவறான குறுஞ் செய்திகள், அவர்களில் வருகை குறைந்துள்ளமைக்கான
காரணமாக இருக்கலாம் என சந்தேகிகிறோம்.
கடந்த வருடம் நுவரெலியாவில் உள்ள அனைத்து வாடகை வீடுகளும்
பதிவுசெய்யப்பட்டிருந்தன. எனினும் இம்முறை அவை வெறுமையாக இருப்பதால், நகர
சபை பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
வசந்தகாலத்தை முன்னிட்டு, பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால்,
சுற்றுலாப் பயணிகள் எவ்வித அச்சமுமின்றி நுவரெலியாவுக்கு வரலாம்.
பாதுகாப்பில் எவ்வித குறையும் கிடையாது என தெரிவித்தார்.
வசந்தகாலம் இம் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
எவ்வாறாயினும் நுவரெலியாவில் அதிக மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும்
சுற்றுலா பயணிகளின் வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும்
நுவரெலிய மக்கள் குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment