Pages

Apr 15, 2013

மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) திடீரென மத்தல சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற விமான நிலையத்தை பார்வையிட்டுள்ளார்.

மத்தல விமான நிலையத்தின் பயணிகள் பிரிவு, நுழைவுப் பகுதி உள்ளிட்ட பல இடங்களுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விமான நிலைய ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களுக்கு புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment