புதுவருட கொண்டாட்டத்தின் போது விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அதில் 120 க்கும் அதிகமானோர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். கடந்த வருடத்தை விட இம்முறை புதுவருட கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
தீ விபத்து காயங்கள் காரணமாகவே கூடுதலானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கவனயீனமான முறையில் பட்டாசு கொழுத்தியமையே இவ்வாறான நிலைக்கு காரணமென கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் ஏற்ப்பட்ட விபத்துக்கள் காரணமாகவும் சிலர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை புதுவருட காலத்தின் போது மகிழ்ச்சிக்காக பட்டாசுகளை கொழுத்துவோர் தம்மை பாதுகாக்கும் விதத்தில் முன்னேற்பாடுடன் செயற்பட வேண்டும். குறிப்பாக சிறுவர்களை பட்டாசு கொழுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாமென கொழும்பு தேசிய வைத்தியசாலை வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment