5 ஆம் திகதி முதல் 15ம் திகதி வரை இலங்கைக்கு மேலே சூரியன்..
கடந்த சில நாட்களாக நாட்டின் உஷ்ண காலநிலை காணப்படுகிறது. பொதுவாக ஏப்ரல்
மாதத்தில் வெப்பமான காலநிலை காணப்படும், என்று கூறிய காலநிலை அவதான நிலையம்
நுவரெலியா அடங்கலான மத்திய மாகாணங்களிலும் வெப்பநிலை உயர்வாக இருப்பதாக
குறிப்பிட்டது.
எதிர்வரும் தினங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில்
மாலை வேளைகளில் இடைக்கிடை சிறிது மழைபெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையுடன் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் அது குறித்து கவனமாக
இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment