இலங்கையில் புதிதாக இரு நெல் இனங்கள் கண்பிடிக்கப்பட்டுள்ளன.

BG 369 நெல் இனம் பயிரிடப்பட்டு 3 அரை மாதங்களுக்குள் அறுவடை செய்ய முடியுமென பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு ஏக்கர் நிலப்பரப்பின் மூலம் 100 முதல் 125 புசல் நெல் அறுவடையை பெற முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது குணநலன்மிக்க வெள்ளை அரிசி இனமாகும். வெள்ளை சம்பா இனமான BG 3 R நெல் பயிரிடப்பட்டு 3 மாதங்களுக்குள் அறுவடை செய்ய முடியும். ஏக்கர் ஒன்றிற்கு 140 முதல் 150 புசல் விளைச்சலை பெற முடியுமென பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment