அவுஸ்திரேலியா செல்லுவோர் நேர்மையான அகதிகள் இல்லை - திஸ்ஸர சமரசிங்க
அவுஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் அதிகமான இலங்கை அகதிகள், பொருளாதார
அகதிகளே தவிர, நேர்மையான அகதிகள் இல்லை என்று அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை
உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலியா வருகின்ற அகதிகளின் படகுகளை திருப்பி அனுப்பினால், இலங்கை அதனை வரவேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சிறந்த வாழ்க்கைச் சூழல் காணப்படுகின்ற போதும். இந்த அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி வருவது பொருளாதார நோக்கமே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment