Pages

Apr 11, 2013

அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் 2009-ம் ஆண்டு மே மாதம் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த காப்பகுதியிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சமீப காலமாக அவுஸ்திரேலியாவில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று அந்நாட்டின் குடியேற்ற துறை தெரிவித்துள்ளது.

இது 2012-ம் ஆண்டு மட்டும் 6428 இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக சென்றுள்ளனர்.

வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக நுழைவதை அவுஸ்திரேலியா கடந்த 2011ம் ஆண்டு தடை செய்தது.

எனினும் இந்த எண்ணிக்கை குறையவில்லை. ஒரு அகதியை அவுஸ்திரேலியா அழைத்து செல்ல இலங்கை ரூபாயில் 5 லட்சம் வரை முகவர்கள் வாங்குகின்றனர்.

இலங்கை மற்றும் தமிழ் நாட்டில் இது போன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.

தமிழக அகதிகள் முகாமில் நீண்ட நாட்களாக அகதிகளாக இருப்பதால் விரக்தி அடைந்து தமிழ் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

மேலும் தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் தினக்கூலிகளாக பணியாற்றி வருகின்றனர். நன்கு படித்த இளைஞர்கள் இது போன்ற பணிகளை விரும்புவதில்லை.

அவர்கள் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெளிநாடு செல்லும் இது போன்ற ஆபத்து மிகுந்த செயல்களில் ஈடுபடுகின்றனர் 

No comments:

Post a Comment