
6 ஆவது ஐ பி எல் பருவக்கால போட்டிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற 11 ஆவது
போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 10 விக்கட்டுகளினால்
வெற்றிபெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்
அணிகள் மோதிய போட்டி, நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. நாணய
சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி களத்தடுப்பை தீர்மானித்தது. அதற்கமைய
முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் சகல
விக்கட்டுகளையும் இழந்து, 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பாக
டேவிட் ஹசி 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் டுவைன் பிராவோ 3
விக்கட்டுகளையும் , நெனஸ் மற்றும் கிரிஸ் மோரிஸ் ஆகியோர் தலா இவ்விரண்டு
விக்கட்டுகளையும் கைப்பற்றினர். போட்டியில் 139 ஓட்டங்களை வெற்றியிலக்காக
கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 17.2 ஓவர்களில் விக்கட்
இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது. அணி சார்பாக மைக் ஹசி ஆட்டமிழக்காமல்
86 ஓட்டங்களையும், முரளி விஜய் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும்
பெற்றுக்கொடுத்தனர். அதற்கமைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10
விக்கட்டுகளினால் வெற்றிபெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்டநாயகனாக மைக் ஹசி
தெரிவுசெய்யப்பட்டார். இதேவேளை தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்றைய
தினம் இடம்பெறவுள்ளன. முதலாவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களு}ர்
மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளதோடு, இரண்டாவது போட்டியில்
ப+னே வொரியஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment