6 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

சர்வதேச வீரர்கள் பல அணிகளாக ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளமை ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இம்முறை ஐ.பி.எல் தொடரில் சன் ரைசஸ் அணி புதிய அணியாக களமிறங்கவுள்ளது. குமார் சங்ககார அணிக்கு தலைமைதாங்கவுள்ளார்.
பிரம்மாண்டமான கிரிக்கெட் திருவிழாவாக இடம்பெறும் ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
போட்டியில் நடப்புச் செம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி டெயார் டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன.
இதேவேளை ஐ.பி.எல் தொடரின் ஆரம்பவிழா நேற்று பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இடம்பெற்ற ஆரம்பவிழாவில் பொலிவ+ட் கலைஞர்களும் , சீன கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினர்.
9 அணிகளும் , 9 சிகரங்கள் போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. போட்டிகளின் போது விளையாட்டு உணர்வுடன் நடந்துகொள்வோம் என உறுதிமொழி வழங்கும் விதத்தில் 9 அணி தலைவர்களும் தொடு திரையில் கையெழுத்திட்டனர். கண்கவர் கலை நிகழ்ச்சிகளோடு ஆரம்பவிழா நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment