Pages

Apr 23, 2013

அட்டாளைச்சேனை அறபாவில் கணணிக்கூடம் திறந்துவைப்பு.-அமைச்சர் ஞ்சித் சியம்பலாப்பிட்டிய(படங்கள் இணைப்பு )

தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட  E- கல்வி மையத்தினைத் திறந்து வைக்கும் வைபவம் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இட்ம்பெ|ற்றது.

பாடசாலை அதிபர் ஏ.எல். கிதுறு முகம்மட் தலைமையில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கலந்துகொண்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு இந்த நாட்டினை ஜனாதிபதியாக பொறுப்பெறுத்த போது - அவர் முன்பாக இரண்டு பாரிய பிரச்சினைகள் இருந்தன. முதலாவது, நாட்டில் சமாதானத்தினை ஏற்படுத்துவது. இரண்டாவது நாட்டை அபிவிருத்தி செய்வது.


அந்தவகையில், ஜனாபதிபதி முன்பாக இருந்த முதலாவது பிரச்சினைக்கு 2009ஆம் ஆண்டு தீர்வு காணப்பட்டது. அதனால்தான், நாம் எல்லோரும் இந்த நாட்டில் சமாதானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இரண்டாவது பிரச்சினை - நாட்டிக்கு அபிவிருத்தியினைப் பெற்றுக் கொடுப்பதாகும். அதற்கான நடவடிக்கைகளில்தான் நாம் தற்போது இறங்கியிருக்கின்றோம். அதில் ஒரு கட்டமாகத்தான் இவ்வாறான இ - கல்வி மையங்களை பாடசாலைகளில் உருவாக்கி வருகின்றோம்.

நாட்டில் அபிவிருத்தியினை ஏற்படுத்தும் பொருட்டு, அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி பல்வேறு பொறுப்புக்களைப் பகிர்ந்தளித்துள்ளார். அந்தவகையில் எனது அமைச்சுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை நான் பொறுப்புணர்வுடன் செய்து வருகின்றேன்.

இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என்கிற மூன்று இனங்கள் மட்டும் வாழவில்லை. கிட்டத்தட்ட 25 இனங்கள் இந்த நாட்டில் வாழ்கின்றன. இந்த இனங்கள் அனைத்தும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பமாகும்" என்றார்.

இதன்போது, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா ஆகியோரின் சேவையினைப் பாரட்டி பாடசாலை நிருவாகத்தினரால் பொன்னாடை போர்த்தப்பட்டதோடு, நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திச குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.




No comments:

Post a Comment