கொட்டக்கலை தாக்குதலுக்கு பொலிஸ் மாஅதிபர், ஜனாதிபதி பொறுப்புக் கூற வேண்டும் - வாசுதேவ

இம்முறை தோட்டத் தொழிலாளர்ளுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட குறைந்த சம்பள உயர்வை கண்டித்து மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு கொட்டக்கலையில் நேற்று (21) நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்படவுள்ளதாக முதல்நாள் இரவு தகவல் கிடைக்கப் பெற்றதாகவும், இத்தகவலை தான் பொலிஸ் மாஅதிபருக்கு தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தாக்குதல் குறித்து பொலிஸ் மாஅதிபரிடம் முற்கூட்டியே தகவல் வழங்கப்பட்டும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என வாசுதேவ நாணயக்கார சுட்டிக் காட்டினார்.
கால்நடை அபிவிருத்தி கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இத் தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதியும் தாக்குதல் சம்பவம் குறித்து பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
ஹட்டன், கொட்டக்கலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்வபம் குறித்து இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment