முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஹசன் அலி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளி கட்சியான முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் விவகாரங்களில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயற்படுவது அவசியமாகுமென அக்கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் மக்களை சந்திக்கும் வேளையில் ஏன் இந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டுமென முஸ்லிம்கள் கேட்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அதிகரித்துள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸை நோக்கி மக்கள் கேர்விகளை தொடுப்பது இயல்பானதே.
இந்நிலையில் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான முஸ்லிம் காங்கிரஸ், தாம் பங்காளி என்பதால் எல்லாவற்றுக்கும் மௌனம் காத்து நிற்காது, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும் அவசியமாகிறது. அரசாங்கத்திலிருந்து உடனடியாக விலகிவிடுவதால் மாத்திரம் முஸ்லிம்களின் பிரச்சினை எல்லாவற்றுக்கும் தீர்வுகள் கிடைத்துவிடாது. அரசாங்கத்திலிருந்தபடியே அழுத்தங்களை பிரயோகித்து முஸ்லிம் சமூகம் மீதான் நெருக்கடிகளை குறைக்க முடியுமெனவும் அர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment