குனூத் ஓதியது போதும் : ஜம்இய்யதுல் உலமா சபை...,...
நாடளாவிய ரீதியில் அனைத்து பள்ளிவாசல்களிலும் ஐவேளை தொழுகையில்
ஓதப்பட்டுவந்த குனூத் அந்நாசிலாவை தொடர வேண்டாம் எனவும் அதனை
நிறுத்திக்கொள்ளுமாரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டியுள்ளது.
இது தொடர்பில் குறித்த அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக்
வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குனூத் அந்நாசிலாவை நிறுத்திக்கொள்ளுமாறு
வேண்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சூழல் அண்மையில் நிலவியது. இதனால்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை குனூத் அந்நாசிலாவை ஓதுமாறு வேண்டியது.
அதனை ஏற்று அனைவரும் இதுவரை சுன்னத்தான நோன்பினை நோற்றும் குனூத்
அந்நாசிலாவை ஓதியும் வந்தனர். இந்நிலையில் குனூத் அந்நாசிலாவை தொடரவேண்டிய
அவசியமில்லை என கருதுகிறோம் .அதற்கான சூழல் தற்போது நீங்கி வருகிறது.
எனவே அதனை நிறுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment