Pages

Apr 21, 2013


காணாமற்போனவர்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறவில்லை - அமெரிக்க அறிக்கை

இலங்கையில் 2012ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு காலப் பகுதியில் உலக நாடுகளது மனித உரிமை மீறல்களின் நிலைமை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பயனுள்ள முயற்சிகளில் அரசாங்கத்தின் ஈடுபாடு மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கள் காணாமற்போகின்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதற்கு முன்னர் காணாமற்போனவர்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸாரின் துன்புறுத்தல்கள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியன தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தமக்குக் கிடைத்த தகவல்களின்  அடிப்படையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மகானாமஹேவா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிய தனியாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியாக வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.N1ST

No comments:

Post a Comment