Pages

Apr 21, 2013


பலத்த பாதுகாப்புடன் இலண்டன் மரதன் ஓட்டப்போட்டி; இலங்கை வீரரும் பங்கேற்கிறார்


இலண்டன் மரதன் ஓட்டப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.

அண்மையில் பொஸ்டனில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியின் போது இரட்டைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறை இலண்டன் மரதன்  ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் அநுராத இந்திரஜித் குரேயும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலண்டன் நகரில் இருந்து தொலைபேசியூடாக நியூஸ்பெஸ்ட்டிற்கு கருத்து வெளியிட்ட அநுராத இந்திரஜித், லண்டன் மரதன் ஓட்டத்தில் முதல் 20 இடங்களை பிடிக்கும் வீரர்கள் வரிசையில் இடம்பெறுவதே தமது நோக்கம் எனக் கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களாக பயிற்றுநரின் வழிகாட்டலுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததாகவும் இன்றைய போட்டியில் திறமையை வெளிப்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற இலண்டன் மரதன் ஓட்டத்தில் போட்டி தூரத்தை அநுராத இந்திரஜித் குரே இரண்டு மணித்தியாலங்கள் 17 நிமிடங்களில் நிறைவுசெய்திருந்தார்.Nst

No comments:

Post a Comment