கட்டாரில் வாகன விபத்து - இலங்கை இளைஞர் வபாத் ,சிங்கள சகோதரர் மரணம், மற்றுமொருவர் படுகாயம்!
கட்டாரில் புதன்கிழமை, 10 ஆம் திகதி நடைபெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய மொஹமட் பய்சான் அப்துல் ஹமீத் (குருநாகல் - பானகமுவ) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வபாத்தாகியுள்ளார்.
இந்த விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 29 வயதுடைய ஜெஸீன் சாதுதம்பி (பொலன்நறுவ) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்கள் இருவரும் அல் முப்தா என்ற வாடகை கார் கம்பனியில் வேலை பார்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இந்தச் சம்பவத்தில் மற்றுமொரு சிங்கள சகோதரரும் மரணமாகியுள்ளார்.
No comments:
Post a Comment