Pages

Apr 10, 2013

யாழ். பல்கலை தொழுகை அறைக்கு ஒயில் வீசி சேதம்!

யாழ். பல்கலைக்கழக தொழுகை அறை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, தொழுகை அறையின் சுவர் பகுதிக்கு கழிவு எண்ணெய் (ஒயில்) வீசி சேதமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தொழுகை அறையின் பெயர் பலகையும் இனந்தெரியாத குழுவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பெயர்ப் பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகள் பல்கைலைக்கழக நிர்வாகத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களின் நலன்கருதி தொழுகை அறை வழங்குமாறு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் நீண்ட காலமாக கோரிக்கைவிடுத்திருந்தது.

இந்நிலையிலேயே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பல்கலைக்கழக உப வேந்தரின் அனுமதியுடன் இந்த தொழுகை அறை நலன்புரி விடயங்களுக்கு பொறுப்பான உதவி பதிவாளரின் அலுவலகத்திற்கு அருகாமையில் ஸ்தாபிக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் விரைவில் கூடி கலந்துரையாடவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் சுமார் 180 முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment