ரயில் ஆசனப்பதிவுக்கான கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு,.
ரயில் ஆசனப்பதிவுக்கான கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக
ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் பீ ஏ டி ஆரியரத்ன
தெரிவித்துள்ளார்.பொதுவான ரயில் கட்டணங்களிலும், ரயில் பருவச்சீட்டு கட்டணங்களிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான போலியான தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை ரயில் டிக்கட்டுக்களுக்காக தபால் ரயில் வண்டிகளில் முன்கூட்டியே பதிவுசெய்வதற்கான கட்டணமும் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் பீ ஏ டி ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment