தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு தேசிய நூதனசாலை இன்று மீண்டும் மக்கள் பார்வைக்காக..

அண்மையில் தேசிய நூதனசாலையில் இடம்பெற்ற விபத்தில் காயங்களுக்கு உள்ளான 13 பேர் பதுளை பெரிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நூதனசாலையின் படிக்கட்டுக்கள் இடிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்நிலையில் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். அவர்களில் சிலர் சிகிச்சைப் பெறறு வீடு திரும்பியுள்ளதோடு, மேலும் 4 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கொழும்பு தேசிய நூதனசாலையில் படிககட்டுக்கள் இடிந்து வீழ்ந்தமைக்கான காரணத்தை கண்டறிய மூவடரங்கிய விசேட குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே குறித்த சம்பவம் இடம்பெற்ற தினத்திலிருந்து நூதனசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. அதற்கமைய இடிந்த படிகளை புனரமைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. எனினும் குறித்த புனரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை பார்வையிடுவதற்கு இன்று முதல் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment