Pages

Mar 31, 2013

துப்பாக்கி வெடித்ததில் 11 வயதுச் சிறுவன் பலி..

துப்பாக்கி வெடித்ததில் 11 வயதுச் சிறுவன் பலி மிஹிந்தலை, இகலகம, கெலதிரப்பத்தே பிரதேசத்தில் துப்பாக்கி ஒன்று வெடித்ததில் 11 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை10 மணியளவில் பயிர் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

No comments:

Post a Comment