Pages

Mar 31, 2013

போலி வைத்தியர்களை கண்டறிய இன்று முதல் விசேட வேலைத்திட்டம் …

போலி வைத்தியர்களை கண்டறிய இன்று முதல்  விசேட வேலைத்திட்டம்  …சட்டவிரோதமாக செயற்பட்டு வரும் போலி வைத்தியர்களை கண்டறிவதற்கான விசேட வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. போலி வைத்தியர்களை கண்டறியும் செயற்பாட்டு பொலிஸ் மற்றும் வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதாகவும், அது தொடர்பில் விசேட குழுவொன்று இன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுரத்த பாதினிய குறிப்பிட்டுள்ளார். சகல மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் ஒவ்வொரு வைத்திய அதிகாரிகள் குறித்த குழுவில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வது தொடர்பில் பொலிஸ் திணைக்களம், நீதிபதிகள் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் விசேட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுரத்த பாதினிய மேலும் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment