மாணவர்கள் மூவர் கைது

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு வேளையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கில்கள் திருட்டில் ஈடபட்டதாக கூறப்படும் பாடசாலை மாணவர்களை கொண்ட கும்பல் ஒன்றை சேர்ந்த மூன்று பேரே கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செயதுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை வத்துகாமம் மற்றும் கலகெதர பொலிஸ் பிரிவுகளில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கட்டுகஸ்தோட்டை நகரை அண்மித்த பிரதேசத்தில் திருடப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றுடனேயே சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலைகளில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த குழுவிலுள்ள இன்னும் ஒரு மாணவர் கைது செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
"இந்த மாணவர்களினதல் திருடப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் எவையும் விறபனை செய்யவில்லை. அவைகளை எரிபொருள் முடிவடைந்த இடத்தில் விட்டுச் செல்லப்படுவதாக" பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களை கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யவள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment