Pages

Mar 27, 2013

ஒலுவிலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களில் 39 ஆண்கள், 18 பெண்கள், 40 சிறுவர்கள். படங்கள் இணைப்பு. 

 சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த 97 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 97 பேர் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இவர்கள் இன்று (27) அதிகாலை அம்பாறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டவர்களிடம் தற்போது விசாரணை இடம்பெற்று வருகிறது. 

கைது செய்யப்பட்டவர்களில் 39 ஆண்கள், 18 பெண்கள் மற்றும் 40 சிறுவர்கள் அடங்குவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டோர் தற்போது ஒலுவில் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். AD

No comments:

Post a Comment