
வருடம் தோறும் நடாத்தப்படும் நிந்தவூர் பிரதேச செயலக விளையாட்டு கழகங்களுக்கிடையில் இடம் பெறும் வருடாந்த விளையாட்டு விழா இம்முறையும் இடம் பெறுகிறது. அந்த வகையில் நிந்தவூரில் காணப்படும் பதிவு செய்யப்பட்ட 07 விளையாட்டுக் கழகங்கள் (இம்றான்இ லகான்இ அறபாஇ மதீனாஇ சதாம்இ அட்வெஞ்சர் மற்றும் சோண்டேர்ஸ்) பங்கு பற்றும் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி இன்று (23.03.2013) சனிக்கிழமை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. விளையாட்டு உத்தியோகத்தர் யுடு அனஸ் அஹமட் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்ற இப்போட்டியில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஹாஜியாணி சுரு அப்துல் ஜலீல் கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட நடுவர் ஆசிரியர் முடு நூர்முகம்மட்இ நடுவர்களான ளுஆஆ நஷாட்இ ஆசிரியர்களான யுஆ நளீம்இ ளுவுஆ ஆகில்இ ஆ கபீர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். சென்ற ஆண்டு நிந்தவூர் லகான் விளையாட்டு கழகங்கம் சம்பியன் கிண்ணத்தினை வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்றுடன் விளையாட்டு நிகழ்சிகள் அனைத்தும் நிறைவு பெறுவதாகவும் அடுத்த வாரம் மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பமாக இருப்பதாகவும் விளையாட்டு உத்தியோகத்தர் யுடு அனஸ் அஹமட் தெரிவித்தார்.
No comments:
Post a Comment