சிறைக்கைதிகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் என தகவல்.
எனினும் 40 வீதமான கைதிகள் 5 ஆம் வகுப்பு வரை மாத்திரமே கல்வி கற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். படிக்கும் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக வட்டருக்க என்ற இடத்தில் சிறைச்சாலை பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.
19 மில்லியன் ரூபா செலவில் இது அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு இலங்கை சிறைச்சாலைகளில் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் கைதிகள் இருந்தனர்.
அதில் விடுதலையானவர்களில் 40 வீதமானோர் மீண்டும் குற்றவாளியாக காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கைதிகளின் உரிமையை பேணும் வகையில் வசதிகள் அதிகரிக்கப்பட்ட சிறைச்சாலைகள் இலங்கையிலேயே காணப்படுகின்றன.
193 வருடம் பழமைவாய்ந்த கண்டி போகம்பரை சிறைச்சாலை நவீன வசதிகளைக் கொண்ட இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோன்று யாழ்ப்பாணம் நீர்கொழும்பு, காலி, மாத்தறை போன்ற இடங்களிலுள்ள சிறைச்சாலைகளும் வசதிகள் அதிகரிக்கப்பட்டவையாக மாற்றியமைக்கப்படுமென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment