சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 இலங்கையர்கள் இந்தோனேஷிய அதிகாரிகளினால் மீட்பு..
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்ப்பட்ட 21 இலங்கையர்கள் இந்தோனேஷியா அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளனர். கிழக்க ஜாவா கடற்பகுதியில் உணவு மற்றும் நீர் இன்றி தத்தளித்துக்கொண்டிருந்த போதே இலங்கையர்களை மீட்டதாக இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளுர் மக்கள் உணவுகளை வழங்கியுள்ளனர். இதேவேளை மீட்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை சேகரிப்பதாக இந்தோனேஷியா குறிப்பிட்டுள்ளது.
இலங்கையர்கள் ஒருவார காலமாக உணவின்றி இருந்ததால், உடல் நலக்குறைவுடன் இருப்பதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment