மீண்டும் சீரற்ற காலநிலை: வான் கதவுகள் திறப்பு
@zafny
நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பராக்கிரம சமுத்திரம், மின்னேரியா, கவுடுல்ல மற்றும் கந்தளாய் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிழக்கு, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் நேற்று இரவு சுழல் காற்று நிலை காணப்பட்டது.
இதனால் தலவாக்கலை - பூண்டுலோயா பிரதான வீதியின் மடக்கும்புர பகுதியில் மூன்று மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் பாடசாலை மாணவர்கள், அலுவலகம் செல்லும் அரச, தனியார் ஊழியர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
முறிந்து வீழ்ந்த மரங்கள் அகற்றப்பட்டு தற்போது பாதை சீர் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை, சுழல் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்யும் என அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
(ath)

No comments:
Post a Comment