ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் யாழ் மாணவர்கள் விடுவிப்பு.
@ zafny ahamed
கைது
செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக
மாணவர்கள் இருவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இவ்வாறு பணிப்பு விடுத்துள்ளார்.
புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இதன்போது தமது பிள்ளைகளது செயற்பாடுகள் தொடர்பில் தாம் பொறுப்பேற்பதாக பெற்றோர்கள், ஜனாதிபதிக்கு வழங்கிய உறுதி மொழியை அடுத்தே ஜனாதிபதி மாணவர்களை விடுவிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டியதாகவும், சிறிடெலோ என்ற அரச ஆதரவு அரசியல் கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சுமத்தி நான்கு மாணவர்கள் கடந்த நவம்பர் மாத இறுதியில் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததார்க ள்.
இவர்களில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வி.பவானந்தன், விஞ்ஞான பீட மூன்றாம் ஆண்டு மாணவன் எஸ்.சொலமன் ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெனமேஜெயந் ஆகிய இருவரும் தொடர்ந்தும் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையுமே விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி இன்று பணித்துள்ளார்.
@ zafny hamed
(i.m)
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இவ்வாறு பணிப்பு விடுத்துள்ளார்.
புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இதன்போது தமது பிள்ளைகளது செயற்பாடுகள் தொடர்பில் தாம் பொறுப்பேற்பதாக பெற்றோர்கள், ஜனாதிபதிக்கு வழங்கிய உறுதி மொழியை அடுத்தே ஜனாதிபதி மாணவர்களை விடுவிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டியதாகவும், சிறிடெலோ என்ற அரச ஆதரவு அரசியல் கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சுமத்தி நான்கு மாணவர்கள் கடந்த நவம்பர் மாத இறுதியில் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததார்க
இவர்களில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வி.பவானந்தன், விஞ்ஞான பீட மூன்றாம் ஆண்டு மாணவன் எஸ்.சொலமன் ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெனமேஜெயந் ஆகிய இருவரும் தொடர்ந்தும் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையுமே விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி இன்று பணித்துள்ளார்.
@ zafny hamed
(i.m)
No comments:
Post a Comment