யாழில் துப்பாக்கியுடன் கைதான மூவரும் விளக்கமறியலில்
யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட
பகுதியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைதான
மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரவுநேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த
கொடிகாமம் பொலிஸ் நிலைய அதிகாரிகள், இராணுவ வீரர்களின் உதவியுடன் இவர்களைக்
கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் கொடிகாமம் கச்சாய் பிரதேசத்தைச்
சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் நேற்றையதினம் (10) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
@ ZAFNY AHAMED
(TA)
No comments:
Post a Comment