Pages

Feb 11, 2013

32 லட்சத்தை மடிக்கணனியில் மறைத்தவர் கைது

 சட்டவிரோதமான முறையில் 32 லட்ச ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்தை மாலைதீவிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நபர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  25,610 அமெரிக்க டொல்கள் மற்றும் 500 சிங்கப்பூர் டொலர்களும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


இவற்றின் இலங்கைப் பெறுமதி 32 லட்ச ரூபா என கணிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

இவர் தனது மடிக்கணனியில் பணத்தை மறைத்து எடுத்துச் சென்றுள்ளார். சந்தேகநபர் மாலைத்தீவிற்கும் இலங்கைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

@zafny ahamed 
(ta)

No comments:

Post a Comment