Pages

Feb 20, 2013


பாலச்சந்திரன் புகைப்பட எதிரொலி: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்!

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைசெய்யப்பட்ட புகைப்படங்களை செனல் 4 வெளியிட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கொடூரக் கொலைக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் மீது இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மர்மநபர்கள் கல் வீசித் தாக்கியுள்ளனர். இதில் அலுவலக கண்ணாடி சேதமடைந்ததுள்ளது.
இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என எயார்லைன்ஸ் அலுவகத்தினர் தெரிவித்துள்ளனர்.
@news line infor
virakasri news 

No comments:

Post a Comment