ஈரானின் நடவடிக்கை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும்: சிங்கள ராவய
ஈரானின் நடவடிக்கையானது இலங்கையில் வாழும் இனங்களுக்கு இடையிலான
நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்து வகையில் உள்ளது என சிங்கள ராவய
அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரானில் புத்தர் சிலைக்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு
தெரிவித்து சிங்கள ராவய அமைப்பினர் இன்று காலை கொழும்பிலுள்ள ஈரான்
தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்போதே அவ்வமைப்பின்
அக்மீமன தயாரத்ன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலைத்தேய கலாசாரத்தை ஊக்குவிக்கும் விடயங்களை ஈரான் தொடர்ச்சியாக தடை
செய்து வருகின்றது. இந்நிலையில் தெஹ்ரானின் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு
வந்த புத்தர் சிலைகளை ஈரானிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதோடு அதனை விற்கவும்
தடை செய்துள்ளனர்.
எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்துக்கு
முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த சிங்கள ராவய அமைப்பினர் தூதரக அதிகாரிகளிடம்
மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
news line info(vi)
No comments:
Post a Comment