Pages

Feb 19, 2013

சட்டக் கல்லூரி மாணவர் விடயத்தில் எந்வொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது- அமைச்சர் ஹக்கீம் 

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர் அனுமதிப் பரீட்சை பாடத்திட்ட மீளாய்வு விடயத்தில் எந்வொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படாத வண்ணம் செயற்படுவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

இது தொடர்பில் பிரதம நீதியரசரிடம் தான் ஆலோசனை பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். 

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர் அனுமதி பரீட்சை படத்திட்டம் மீளாய்வு விடயம் தொடர்பில் பிரதம நீதியரசரை சந்தித்ததாக நீதி அமைச்சர் இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் எழும்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். 

பரீட்சை படத்திட்ட மீளாய்வு காரணமாக மாணவர்கள் பலருக்கு அநீதி இழைக்கப்படாதா என பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். 

இவ்வருடம் தொடக்கம் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை வினாத்தாளில் மாற்றம் கொண்டுவரப்படும் என கல்லூரியின் அதிபர் டபிள்யு.ரொட்ரிகோ தெரிவித்திருந்தார். 
 @zaf 
newsline info(i.m)

No comments:

Post a Comment