Pages

Feb 9, 2013

  சவுதியில் இலங்கையருக்கு 1 வருட சிறையுடன் 100 கசையடிகள்

@ZAFNY AHAMED

சவுதி அரேபியாவில் நண்பர்களோடு இணைந்து சூனியம் மற்றும் மாந்ரீக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கையொருவருக்கு 1 வருட சிறையும் 100 கசையடியும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பதியதளாவைப் பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத் பெரெராலாகே துங்கசிறி என்பவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர் சவுதியில் வீடொன்றில் சாராதியாக பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சவுதி உமுல் ஹமாம் மாவட்ட பொலிஸில் பதியதுங்கசிறி மீது மாந்ரீக நடவடிக்கையில் ஈடுபட்டமை மற்றும் உள்நாட்டு சட்டத்திற்கு முரணாக தெரியாத பெண்ணொருவரை சந்தித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாக அங்குள்ள தூதரக அதிகாரியொருவரின் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் தனது உறவுக்கார பெண்ணொருவர் பணிப்பெண்ணாக இருந்த வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக துங்கசிறி அங்கு சென்றிருந்த வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துங்கசிறியின் தண்டனைக்காலம் எதிர்வரும் மேமாதம் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் பெயர் பொதுமன்னிப்பு பெறவுள்ளோரின் பெயர்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு அவ்வாறு வழங்கப்பட்டால் அவர் தண்டைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
துங்கசிறிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரதி வெளிநாட்டு அமைச்சினூடாக தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

@ZAFNY AHAMED 
(VR,K)

No comments:

Post a Comment