Pages

Nov 6, 2013

ஒரு நிகழ்வைக் கண்டேன் அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்-சம்மாந்துறை அன்சார்

மக்கள் நண்பன் ( சம்மாந்துறை அன்சார்)

என்னுடைய சகோதரரை வழி அனுப்புவதற்காக இன்று நான் சவுதி அரேபியா றியாத் விமானநிலையம் சென்ற போது ஒரு நிகழ்வைக் கண்டேன் அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

அதாவது..ஒரு சவுதி கணவன்-மனைவி இரண்டு பேரும் அவர்களது வீட்டிலே வேலை செய்து கொண்டிருந்த ஹவுஸ்மெயிட்டை இலங்கைக்கு வழி அனுப்ப வந்திருந்தார்கள். நான் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த போது உண்மையில் மிகவும் சந்தோசப்பட்டேன். காரணம் அந்தப் சவுதிப் பெண்மனி தன்னுடைய மகளை வழி அனுப்பி வைப்பதைப் போல் அந்தப் ஹவுஸ்மெயிட்டை வழி அனுப்பி வைத்தார்.

விமானத்திற்குல் இருந்த கொண்டு சாப்பிடுவதற்காக, பிஸ்கட், சொக்லெட், தண்ணீர், சிப்ஸ் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த ஹவுஸ்மெயிட்டின் உடையை நன்றாக சீர்படுத்தி, அந்தப் இலங்கைப் பெண்ணின் கன்னத்தை தடவி, விமானத்துக்குல் நுழைந்தவுடன் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் போன்ற அத்தனை விடயத்தையும் மிக அன்பாக சொல்லிக் கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள்.

உண்மையில் நான் அந்தப் சவுதிப் பெண்மனியோடு பேசி அவருடைய இவ்வாறான செய்கையைப் பாராட்ட முனைந்தேன், இருந்த போதும் முடியவில்லை. அந்தப் பெண் எங்கு இருந்தாலும் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, நல் அருள்புரிவானாக.
ஆமீன்....ஆமீன்...யாரப்பல் ஆலமீன்.

No comments:

Post a Comment