Pages

Nov 6, 2013

இன்று முதல் 35 பாடசாலைகளுக்கு விடுமுறை /// பொதுநலவாய மாநாட்டுக்காக கொழும்பில் சில பாதைகள் மூடப்படும

கொழும்பில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை இன்று 6 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை 35 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.

கொழும்பில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகளை தற்காலிகமாக மூடிவிடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி இன்று முதல் 19 ஆம் திகதி வரை 29 பாடசாலைகளும் 7இ8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மேலும் 6 பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


பொதுநலவாய மாநாட்டுக்காக கொழும்பில் சில பாதைகள் அடிக்கடி மூடப்படும

பொதுநலவாய அரச தலைவர்களது மாநாடு ஒட்டியதான அரச தலைவர்கள் பயணிக்கும் வேளைகளில் மாத்திரம் கொழும்பு நகரத்தின் சில பாதைகள் அடிக்கடி மூடப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பாளரான சிரேஷ்ட 
காவல் துறை மா அதிபர் அனுர சேனநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறுகின்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நவம்பர் 9ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த போக்குவரத்து நடைமுறை கடைப்பிடிக்கப்படும்.

மாநாட்டிற்கு வருகை தரும் அரச தலைவர்கள் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் இருந்து கொழும்பு-கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை ஊடாக, பேஸ் லைன் வீதி, பொரளை, தும்முல்ல ஊடாக காலி வீதியினைச் வந்தடையவுள்ளனர்.

இதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அரச தலைவர்கள் கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு வரும் வேளைகளில், குறித்த பாதைகள் இடைக்கிடையில் மூடப்படும் எனவும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பாளரான சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment