
BA (Hons), LLB (R)
இன்றைய உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் பீடித்துள்ள ஒட்டுண்ணியாக இலஞ்சம் மற்றும் ஊழல் விளங்குவது மட்டுமன்றி இது ஒரு சமுகத்தோற்றப்பாடாகவும், ஒரு சமூகப்பிரச்சினையாகவும், பொருளாதாரரீதியிலும், அரசியல்ரீதியிலும், சட்டரீதியிலும் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதாகவும் மிக அதிகளவில் பரவலாக பேசப்படக்கூடியதுமான மேலெழுந்த வாரியானவற்றுக்கு பங்கம் விளைவிக்ககூடியதுமான ஒன்றாக இலஞ்சம் மற்றும் ஊழல் காணப்படுவதனால் இன்று ஒவ்வொரு நாடும் ஒருபோதும் சிந்தித்திராத பாதையில் பயணிக்கின்றது என்பது யாவரும் அறிந்த உண்மையாக காணப்படுகின்றது. இவ்வாறிருக்க உலக நாடுகளுள் அதிகம் இலஞ்சம் மற்றும் ஊழல் உள்ள நாடாக இந்தியா கருதப்படுகிறது. இந்தியாவின் அரசியல் சீரழிவில் பங்களிப்பு செய்யும் ஒன்றாக இலஞ்சம் மற்றும் ஊழல் விளங்குகிறது. எனினும் எனது இக்கட்டுரையானது இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றியும் இதற்கான காரணங்களையும், இதனால் ஏற்படும் விளைவுகளையும், இதன் செயற்பாடு பற்றியும் இலங்கையினை மையப்படுத்தியதாக நோக்க வருகின்றது. இலஞ்சம் மற்றும் ஊழல் என்றால் என்னவென்று நோக்கும் போது....
பார்காரா என்ற அறிஞர் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி வரைவிலக்கணப்படுத்துகையில், 'வேலையொன்றை கவனிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் செயல் ஒரு பொதுச் சேவகனால் பணம் சம்பந்தமான உத்தரவாதத்திற்காக அல்லது வேறு பொருள் ரீதியான அனுகூலத்திற்காக அல்லது மறைமுகமாக அவனுக்காகவும் அவனுடைய குடும்பத்திற்காகவும் அல்லது அவனது நண்பர்களுக்காகவும் அசட்டைத்தனமாக வழங்குவது.' என்கின்றார்.
பேன்கேவ என்ற அறிஞர் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி வரைவிலக்கணப்படுத்துகையில், 'இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தை தனிபட்ட நலனுக்காக மறைமுகமான முறையில் பயன்படுத்தல், மேலும் மொத்தமாக சமூகத்திற்கும், சட்டத்திற்கும் எதிராக நடப்பதுமாகும்' என்கின்றார்.
சமூகத்தி;ன் அடிமட்ட நிலையில் இலஞ்சம மற்றும் ஊழல் உள்ளது. இலஞ்சத்தால் கவரப்படாத எந்தவொரு தனிநபரும் கிடையாது. இலஞ்சம் மற்றும் ஊழலானது பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோன்றுகிறது. சுரண்டும் எந்தவொரு வகையும் வேலையை சரியாக செய்யாமல் இருப்பதும் நேரத்தை, சக்தியை, பணத்தை வீண்விரயம் செய்வதும் ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை துரோகம் செய்வதும் அரச மற்றும் தனியார் மூலதனத்தை ஒழுங்கீனமாக நிருவகிப்பதும் அதிகார பலத்தை மிதமிஞ்சி பயன்படுத்துவதும் சட்டவிரோதமாக பொருட்களை கடத்திச் செல்வதும் இலஞ்சமாகும். இலஞ்சத்தின் பாரியதொரு பரப்பில் பாலியலும் மாறியுள்ளது. இலஞ்சமானது தேசிய பாத்திரத்தின் ஒரு பகுதியாகவும் தூண்டும் காரணியாகவும் மாறியுள்ளது என சுரேஸ் கோழி குறிப்பிட்டுள்ளார.
(சுரேஸ் கோழி, பக்கம் 31-33)
அதிகமான மக்கள் ஒரு காரணத்துக்கோ அல்லது இன்னொரு காரணத்துக்கோ ஒரு நேரத்திலோ அல்லது வேறொரு நேரத்திலோ ஒரு வகையிலோ அல்லது இன்னொரு வகையிலோ இலஞ்ததால் களக்கமடைந்துள்ளனர். இத்தகைய இலஞ்சமானது பின்வரும் வகையினை கொண்டு காணப்படுகின்றது.
• அதிகார ஊழல் (Power Corruption)
• முழு ஊழல் (Absolute Corruption)
• முறைமை சார் ஊழல்(Systematic Corruption)
• அரசியல் ஊழல் (Political Corruption)
• கடுமையான அல்லது அதீதமான ஊழல் (Grand Corruption)
• தொடர்ச்சியற்ற ஊழல் (Sporadic Corruption)
• சிறியளவிலான ஊழல் (Petty Corruption)
இலங்கையானது பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாடாகும். அத்தகைய இலங்கை சமூகத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி நோக்கும் போது இலஞ்சமானது எல்லா இடங்களிலும் பரவியுள்ள ஒன்று மட்டுமல்ல அதற்கு எண்ணற்ற வடிவங்களும் காணப்படுகின்றது. மிகவும் வெறுக்கத்தக்கதாகவும் பல்வேறு மாறுபடும் வடிவங்களை தன்னகத்தே கொண்டுள்ளதும் தெளிவாகிறது. மேலும் ஊழல் பல்வேறுபட்ட விதங்களில் கையாளப்படுகின்றது. குறிப்பாக இலஞ்சம் கொடுத்தல் ஒப்புவிக்கப்பட்ட உடைமையை மோசடியாக கையாளல், மோசடி, சட்டத்துக்குப் புறம்பாக வலிந்து பணம் பறித்தல், அதிகார துஷ்பிரயோகம், முரண்பாட்டு அக்கறை, உள்ளக வர்த்தக இரகசிய தகவல்களை முறைகேடாக கையாளல், உறவுச் சலுகை, முறைகேடான சார்பு நிலை என பல்வேறு வகையாக காணப்படுகின்றது. இவ்வூழலானது அபிவிருத்தியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் ஸ்தம்பிதம் அடையச் செய்யும் முக்கியமான ஒரு காரணியாகும். அவ்வகையில் இலங்கை சமூகத்தை எடுத்து நோக்கினால் இங்கு ஊழல் அளவு கடந்தது. அண்மையில்Transparency International 2010 ஊழல் தொடர்பாக வெளியீட்டு அறிக்கையின்படி இலங்கை 91வது இடத்தில் உள்ளது. இதனை பின்வரும் அட்டவணை மூலம் அவதானிக்கலாம்.
Published by Transparency International
Rank Country 2003 2004 2005 2006 2007 2008 2009 2010
லஞ்சமானது இரத்தப்புற்றுநோய் போன்றது இது நாட்டில் ஆழமாக வேரூண்டியுள்ள ஒரு சிக்கலான நிகழ்வாகும். இது பல்வேறு காரணிகளாலும் சக்திகளாலும் உருவாகி எங்கும் பரவிக்காணப்படுகின்றது.
பொருளாதார ஸ்திரமற்ற நிலை
வருமான வரியின் அதிகரித்த வீதம்
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் குறைவான சம்பளம்
அதிகாரத்தினதும் செல்வாக்கினதும் புதிய மூலம் வெளித்தோன்றல்
ஜனநாயகத்தின் ஒழுங்கமைப்பு
கறுப்புப் பணத்தின் அதிகமான தோற்றம்
சமூக மற்றும் பொருளாதார நவீனமயமாக்கம் ஏற்படுத்துகிறது.
(CB.MAMORIA, PAGE 844-847)
இத்தகைய இலஞ்ச ஊழலின் பிரதான பண்புகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்த முடியும்.
வாழ்வில் பொதுவான வகையில் தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது.
எந்தவொரு நபரையும் தனது கடமையிலிருந்து வழிதவறி விடச் செய்கிறது.
தமது கடமையை துஷ்பிரயோகம் செய்ய வழிவகுக்கிறது.
சரியான நேரத்தில் பிழையான நடவடிக்கைகளை சரியாக செய்வதால் பொதுமக்கள் வாழ்வில் அதிகார துஷ்பிரயோகத்தை ஏற்படுத்தும்.
பொது இடங்களில் அல்லது காரியாலயங்களில் அல்லது பொதுமக்கள் வாழ்வில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதில் தொடர்புபடுகிறது.
இருப்பினும் இலங்கையில் ஊழல் தடுப்புக்கான பல்வேறு சட்டங்களும் அச்சட்டங்களை விரைவுபடுத்துவதற்கான பல்வேறு நிறுவனங்களும் காணப்படுகின்றன.
1883 தண்டனை சட்டக்கோவை
1954 இலஞ்ச ஊழல் சட்டம்
1982ம் ஆண்டின் பொதுச் சொத்துக்கள் பற்றி தவறுகள் சட்டம்
1975 சொத்துக்கள், பொறுப்புக்கள் வெளிப்படுத்துகை சட்டம்
2006ம் ஆண்டின் பண தூய்தாக்கல் தடுப்புச்சட்டம்
2006 நிதி கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டம்
1994ம் ஆண்டு 20ம் இலக்க சட்டம்
தாபன விதிக்கோவை
நிதிசார் ஒழுங்கு விதிகள்
மேற்குறிப்பிட்ட சட்டங்களை தவிர இலங்கையில் ஊழலை தடுப்பதற்காக ஊழல் தடுப்பு நிறுவனங்களும் தமது பங்கை செவ்வனே ஆற்றிவருகின்றன.
1943ல் L.M.D சில்வா ஆணைக்குழு
1948 கெனமன் ஆணைக்குழு
1949 M.W.H.D சில்வா ஆணைக்குழு
1959 தலகொடபிட்டிய ஆணைக்குழு
1978 ஜனாதிபதி ஆணைக்குழு
கணக்காய்வாளர் அதிபதி திணைக்களம்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்தூதலை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC)
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
சுயாதீன தேர்தல் ஆணைக்குழு
நீதிமன்றங்கள்
பாராளுமன்றம்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்டங்களும் ஒழுங்கு விதிகளும் போதியளவு காணப்பட்டாலும் இதன் மூலம் சொல்லப்பட்ட சட்ட ஏற்பாடுகளும் நிறுவனங்களும் பற்றிய தகவல்களை பயன்படுத்தி ஊழலை ஒழித்துக் கட்டுவதென்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்குறியே. அந்தவகையில்,
இலஞ்சம் பெறப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நாளாந்தம் 25 முறைப்பாடுகள் கிடைப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 03 மாதங்களில் தமது அதிகாரிகள் மேற்கொண்ட 40 சுற்றிவளைப்புக்களில் 23 சுற்றிவளைப்புக்கள் வெற்றியளித்ததாக ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான ஜகத் பாலபட்டவேந்தி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இலஞ்ச ஊழல் தொடர்பான முறைப்பாடுகளின் தொகை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் குற்றப் புலனாய்வு பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார். இதில் 950 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் 2006ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதில் 21 முறைப்பாடுகள் பொலிசாருக்கு எதிராக வழங்கப்பட்டமை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மட்டக்களப்பில் இராணுவ வீரரிடம் போக்குவரத்து பொலிசார் இலஞ்சம் வாங்கிய காரணத்தினால் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே.(27 ஜூலை 2011 வீரகேசரி)
மேலும் பாடசாலை மாணவர்களை சேர்க்கும் போது இலஞ்சம் பெற்றதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 147 பேர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரினால் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் குறிப்பாக பாடசாலை அதிபர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் போன்றோர்களாவர். இவ் 147 பேரில் 07 வலயக்கல்விப் பணிப்பாளர்களும், 18 கல்வி அமைச்சின் அதிகாரிகளும், 40 அதிபர்களும் அடங்குகின்றனர்.
(gtmn.brandx-view/GTMNE itorial/tabit/147..)
மேலும் மட்டக்களப்பில் மண் ஏற்றி வந்த லொறி சாரதியிடம் கப்பம் பெற்றதாக பொலிஸ் உத்தியோகத்தர் மீதும், அவிசாவளை நீதிமன்றத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் 2000 ரூபாவை இலஞ்சம் பெற்ற சம்பவத்தினாலும், எப்பாவெல மற்றும் கெக்கிராவ பகுதிகளில் இரு வேறு நபர்களிடம் இலஞ்சம் பெற்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.(2010.12.13 தினகரன்)
இவ்வாறு நாளுக்குநாள் இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விடயங்கள் எமக்கு அறியக் கிடைக்கின்றது. இவ்வாறான இலஞ்சம் மற்றும் ஊழலினால் பின்வரும் விளைவுகள் ஏற்படுகின்றன. அந்தவகையில் சட்டங்கள் புறக்கணிக்கப்படல், அரசாங்கத்தினால் வழங்கப்படும் பெரிய தொகையினை அரச ஊழியர்களே சுரண்டுதல், இதனால் சமூக தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் போதல், சட்டத்தில் வன்முறைகளை ஏற்படுத்துதல், பொருளாதாரத்தில், பங்குச் சந்தையில், விளம்பரங்களில் தனக்கேற்றவாறு சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பொய்யான விலை, போலியை நிஜம் போல் காட்டி ஊழல் செய்தல், பதுக்குதல், இதே போன்று கல்வியில் ஏழை மாணவர்கள் சிறந்த கல்வியை பெற பெருந்தொகையான பணம் செலுத்த வேண்டியுள்ளமை, கல்வி பாதிக்கப்படுகின்றமை, முறையற்ற பாலியல் உறவுக்கு காரணமாக அமைகின்றமை போன்ற அம்சங்கள் இலங்கை சமூகத்தினரிடையே விளைவுகளாக தோற்றம் பெறுகின்றன.
மேலும், தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமையை சட்டவாக்கத்தில் உட்படுத்தல் மேலும் நிர்வாக மக்கள் பங்கேற்பை பெற்றுக்கொள்ளல். அத்துடன் ஐக்கிய நாடுகள் மாநாட்டின் குற்றவாளிக்கெதிராக 2010.11.15ல் நடைமுறைக்கு வந்த 55ஃ25 ம் இலக்கத்தின்படியான தீர்மானத்தில் குற்றவாளிகளை இனங்கண்டு ஏனைய நாடுகளுக்கு தெரியப்படுத்தி குறித்த அதிகாரிகளை வழக்கு தொடர உத்தரவு அளிக்கப்பட்டது. 1975ல் 05வது ஸ்தாபனத்தின் மாநாடு குற்றங்களை தடை செய்வதையிட்டும் அவர்களுக்கு நடவடிக்கை எடுப்பதையிட்டும் ஜெனிவாவில் நடைபெற்று நடைமுறைப்பத்திரம் வெளிவந்தது. இப்பத்திரம் பொருளாதார குற்றங்கள் உட்பட ஊழல்களையிட்டு தேசங்களுக்கு எச்சரிக்கை கொடுத்தது. அரச நிர்வாக விதிமுறைகள் என்றைக்கு மக்களை பிழியத்துவங்கியதோ அப்போதே இலஞ்ச ஊழல் என்ற வித்து விதைக்கப்பட்டு விட்டது. அந்த வித்து இன்று ஆலவிருட்சமாக வளர்ந்து ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியை வேரோடு வீழ்ச்சியடைய செய்துவருகிறது.
மேற்கூறிய விடயங்களின் மூலம் இலஞ்ச ஊழல் என்பது மிகப் பெரிய குற்றம் என புலப்படுகின்றது. அவ்வகையில் இலஞ்சம் மற்றும் ஊழல் என்பது ஒரு உலகளாவிய அதிசயமாக காணப்படினும் இதே நிலைமையினயே இலங்கையிலும் காணப்படக்கூடியதாக உள்ளது. எனவே இலங்கையில் மாத்திரமன்றி உலக நாடுகளிலும் இலஞ்ச ஊழலை தடுப்பதைவிட தவிர்ப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும். ஆகவே பின்வரும் செயற்பாடுகளின் மூலம் அவற்றை முன்னெடுக்க முடியும்.
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
ஊழல் ஒழிப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பை போதியளவில் ஏற்படுத்தல்.
வெகுசன தொடர்பு சாதனங்கள் ஊழல் பற்றிய அறிக்கையிடலுக்கும் அப்பால் சென்று எதிர்ப்பு மனப்பாங்கு ஒன்றை ஏற்படுத்த முற்படுதல்.
அரசியல்வாதிகள் ஊழல் புரிவதை தவிர்த்தல்.
அதிகபடியான தண்டனை வழங்குதல்.
நிர்வாக தாமதங்களை முடிந்தளவு தடுக்க நடவடிக்கை எடுத்தல்.
வெளி தலையீடுகளை தவிர்த்தல்.
குழுவான செயற்பாடுகளை பரவலாக்குதல்.
ஊழியர்களின் சம்பளத்தை உயர் நிலையில் பேணல்.
கல்வியில் பாரபட்சம் காட்டப்படாமல் விடல்.
சுமூக நலன்புரி விடயங்கள் தொடர்பாக நிறுவனங்களினூடாக ஒரு மாற்றத்தை கொண்டு வருதல்.
இவ்வாறு இருக்க இலஞ்ச ஊழல் ஆகிய செயல்களின் அதிகரிப்பு சமூகத்தில் பொருளாதார ரீதியான சமத்துவமின்மையை ஏற்படுத்துவதுடன் மக்களுக்கு ஆட்சி மீது நம்பிக்கை இழக்கப்படுகின்றது. மேற்கூறிய விதந்துரைகளின் மூலம் ஊழலற்ற நீதியும், நேர்மையும் கொண்ட பலம்பொருந்த சமுகம் ஒன்றை கட்டியெழுப்புவதில் பிரஜைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் உண்டு எனவே ஊழல் மற்றும் இலஞ்சம் என்பவற்றை முற்றாக ஒழிக்கமுடியாவினும் அவற்றிற்கு துணைபோகாமல் எம்மால் இயன்ற முயற்சிகளை முன்னெடுப்போம்.
உசாத்துணை நூல்கள்:
1. Joshi. S.C., (2005), “Social problem”, Akansha publishing house, India.
2.தினகரன் ;> 2011.07.27.
3. http//en wikipidia.org/corruption perception index. Accessed on 10.10.2011.
4. http//www.ifex.org/srilanka/2010.03.15 weliamuna threatenal. Accessed on 10.10.2011
உங்களது கட்டுரைகளை எமக்கு அனுப்பி வைக்கலாம் newslineinfo@yahoo.com
No comments:
Post a Comment