Pages

Oct 2, 2013

அட்டாளைச்சேனையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை இராணுவத்தினர் கைது

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடவுச் சீட்டு மற்றும் விசா இல்லாத நிலையில் வீதியில் சுத்தித்திரிந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அட்டாளைச்சேனை பிரதேச வீதியில் சுத்தித்திரிந்தவேளை இந்நபர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணையிட்டபோது இவரிடம் கடவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருக்கவில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.IM

No comments:

Post a Comment