Pages

Oct 2, 2013

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் சிறுவர் தினம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) யினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் மௌலவி வீ.ரீ.எம்.ஹனீபாவின் மேற்பார்வையில் நடைபெற்ற ஊர்வலத்தில் மாணவர்கள் பிரதான வீதியூடாக அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தனர்.

இதன்போது கூடுதலான மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். ஆசிரியர் கலாசாலை பயிற்சி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்.



No comments:

Post a Comment