பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியரும் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.40 மணிக்கு இலங்கை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
அமீரகத்தின் ஃப்ளின்ட் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வாழ்த்துரையை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் சிறப்புரையை வித்தக கவிஞர் பா.விஜய் அவர்களும் வழங்கியுள்ளனர்.
‘காப்பியக்கோ’ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரிஸின் தேசிய தலைவருமான ரவூப்ஹக்கீம் அவர்கள் கலந்து கொள்கின்றார்.
கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹஸன் அலி , பைசல் காசீம், பிரபா கணேசன், ஹூனைஸ் பாருக், எம்.எஸ்.எம் அஸ்லம், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான எம். அப்துல் மஜீட் அவர்களும் கலந்து கொள்வதோடு சிறப்பதிதிகளாக மேல்மாகாண ஆளுனர் அஷ்ஷெய்க் அலவி மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்,வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸீத் ,அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு விசேட விருந்தினராக தேசமான்ய, தேசசக்தி டாக்டர் அல்ஹாஜ் அப்துல் கையூம் அவர்கள் கலந்து கொள்கின்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் கல்விமான் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல்,
முன்னாள் சவூதி அரேபிய துணைத்தூதுவர் கலாநிதி இனாமுல்லாஹ் மஸாயுதீன், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், எழுத்தாளர் உடுவைதில்லை நடராஜா, கவிஞர் எஸ்.முத்துமீரான், எழுத்தாளர் அந்தனிஜீவா, கலைவாதிகலீல், எழுத்தாளர் டாக்டர் ஞானசேகரன், கவிஞர் டாக்டர் தாஸீம் அகமது, கவிஞர் சோலைக்கிளி, எழுத்தாளர் சுதாராஜ் ,கவிஞர் மேமன் கவி, கவிஞர் அஸ்ரப் சிஹாப்தீன்,எழுத்தாளர் மானாமக்கீன், கலைஞர் கலைச்செல்வன், கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கும் இந்த வெளியீட்டு நிகழ்வில் இலங்கையின் முன்னணிக் இசைக்கலைஞர்கள்,பிரபல ஊடகவியலாளர்கள் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
நூல் அறிமுகத்தை ‘தமிழ் தென்றல் அலி அக்பர்’ அவர்களும் கவி வாழ்த்தினை கவிஞர் கிண்ணியா அமீரலி அவர்களும் ,நூலாய்வினை பேராசிரியர் கலாநிதி துரைமனோகரன் வழங்க கருத்துரைகளை மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், எழுத்தாளர் உடுவை தில்லை நடராஜா, கவிஞர் முத்துமீரான், சோலைக்கிளி ஆகியோர் வழங்குகின்றனர்.
விழா நிகழ்ச்சிகளை சிரேஷ்ட அறிவிப்பாளர் நாகபூசணியுடன் இணைந்து வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு பொறுப்பதிகாரி அறிவிப்பாளர் எம்.எஸ்.எம்.இர்பான் தொகுத்து வழங்குகின்றார்.
No comments:
Post a Comment