-அகமட் எஸ். முகைடீன்-
சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று முன்தினம் (11.10.2013) அமைச்சரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பாலர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மற்றும் பாலர் கல்விக்கான வளங்களின் குறைபாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு சுனாமியினால் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கல்முனை மாநகர பிரதேசத்தில் காணப்படுகின்ற மகளீர் சங்கங்களிற்கு கடன் உதவிகளை வழங்குவதற்கான கோரிக்கை முதல்வரினால் முன்வைக்கப்ட்டது. இக்கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட அமைச்சர் எதிர்காலத்தில் கடன் உதவிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment