Pages

Sep 2, 2013

SLMCயின் சூறாவளி பிரச்சாரம் குளியாப்பிட்டியில் (படங்கள்)

-ஆசாத் -

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வடமேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஏ.எல்.தவம்,கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் சூறாவளி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

குளியாப்பிட்டி, தம்பதெனிய ஆகிய பிரதேசங்களில் சென்ற ஆகஸ்ட் மாதம் 30, 31 மற்றும் செப்டம்பர் 01 ஆகிய தினங்களில் இடம்பெற்ற பிரச்சார கூட்டங்களின்போது, வடமேல் மாகாண சபையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம், ஏன் இந்தக் கட்சி அரசாங்கத்துடன் இன்னும் பின்னிப் பிணைந்து செயற்படுகின்றன, கட்சியின் கொள்கை விளக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக விளக்கவுரைகள் இடம்பெற்றன.



No comments:

Post a Comment