Pages

Sep 1, 2013

கல்முனை ஸாஹிறா கல்லூரியின் களஞ்சிய அறையில் தீ

கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியின் களஞ்சிய அறை இன்று ஞாயிற்றுக்கிழமை ( 1.9.2013 ) காலை 11.00 மணியளவில் தீப்பிடித்துக் கொண்டது.

கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு அருகிலுள்ள உடைந்த கதிரை,மேசைகளை களஞ்சியப்படுத்தியிருந்த களஞ்சிய அறையே இவ்வாறு திடிரென தீப்பிடித்தது.

தீப்பற்றிக் கொண்டதனை அவதானித்த பாடசாலையின் பழைய மாணவர்கள் கல்முனை மாநகர சபைக்கு தெரியப்படுத்தியதனை தொடர்ந்து கல்முனை மாநகரசபையின் தீ அணைக்கும் பிரிவினர் துரிதமாக செயற்பட்டதனால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஸ்தலத்தலத்திற்கு விரைந்த கல்முனை பொலிசார் தீ சம்பவம் இடம்பெற்றது தொடர்பாக மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

No comments:

Post a Comment