Pages

Sep 1, 2013

யேமன் பிரதமரை படுகொலை செய்ய முயற்சி; மயிரிழையில் உயிர் பிழைப்பு

யேமனிய பிரதமர் மொஹமட் சாலிம் பஸின்தவா படுகொலை முயற்சியொன்றில் எதுவித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் தனது அலுவலகத்திலிருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரது வாகனத் தொடரணி மீது துப்பாக்கிதாரிகள் சூட்டை நடத்தியுள்ளனர்.
அவர் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

யேமனில் அல் - கொய்தா போராளிகளின் செயற்பாடுகளை முறியடிக்க அந்நாட்டு அரசாங்கம் போராடி வருகிறது.

அதேசமயம் தென் லாபோஸ் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment